Monday, February 27, 2006

நினைவுகள் இல்லாத மனது

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் சுதனின்விஜி எழுதிய நினைவின் கதை

என் முத்தமிழ் உள்ளங்களே,

எல்லோர் நலனுக்கும் பிரார்த்திக்கின்றேன். ஒட்டாவாவில் வெள்ளி இரவு 8:39 மணி அளவில் புவி அதிர்ச்சி ஏற்பட்டது அதிர்வு 4.5. 'கண்ணிமைக்கும் நேரத்தில் எதுவுமே நடக்கலாம் என்ற 'சந்திரமுகி' பாட்டின் வரிகள் நினைவிற்கு வந்தது.

என் வாழ்நாளில் நான் முதல் முதல் உணர்ந்த புவி அதிர்வு இதுதான். தாக்கம் என்று அழிவுகள் ஒன்றுமில்லை ஆனால் அதிர்வுகள் ஏற்படுத்திய தாக்கம் நெஞ்சை விட்டு அகலவில்லை. வாரம் வாரம் முத்தமிழின் வளவினுள் உங்களை சந்திக்க வேண்டும் என்ற பேராவலில் இன்று ஓடி வந்தேன்.

சரி உங்கள் நினைப்புகள் எல்லாம்..எப்படி நல்லவழியில் தானே?!! ஆக நெருங்கிய பொருள் கைபடும்"....

இன்றும் அதைப்பற்றித்தான் வளவினுள் அலசப்போகின்றோம், நினைவுகள் இல்லாத மனது ஒன்று இருக்குமானால் அது அலையில்லாத கடல் போன்றது.
நினைவுகள் எந்த நேரமும் நம்மை ஆட்கொண்டபடிதான் ஒரு நொடியில் இந்த உலகின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்து வந்து விடும் இந்தப்ப்பொல்லாத நினைவுகளை உருவாக்கும் மனது.

சரி இந்த பிழைப்பை கெடுக்கும் நினைவின் அடுத்த கதைக்கு நகர்வோமா?

ஒரு குருவும் சீடனும், ஆற்றங்கரைக்கு நீராடச்சென்றிருந்தார்கள் அப்போது ஒரு பருவப்பெண் ஆற்றில் மூழ்கும் நிலையில் தன்னை காப்பாற்றும் முயற்சியில் தத்தளித்துக்கொண்டிருந்தாள் அதைக்கண்ட சீடன் உடனேயே அவளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கி அவளைக் கரையும் சேர்த்தான். இது குருவுக்க்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை அவர்கள் குளித்து முடிக்கும் வரை ஒன்றும் பேசாத குரு....'சிறிது நேரம் கழித்து 'சிஷ்யா நீ அப்படிச்செய்து விட்டாயே உன் பிரம்மச்சரியம் என்னாவது இத்தனை நாளும் நீ கற்ற அத்தனை கல்வியும் வீணானதே!!! என்று தலையில் அடிக்காத குறையாக பெரும் குறைப்பட்டுக்கொண்டார். அப்போது சீடன் சொன்னார்..'குருவே நான் அப்போதே அந்த பெண்ணை இறக்கிவிட்டு விட்டேனோ நீங்களோ அதை இப்போதும் அந்த நினைவை சுமந்துகொண்டிருக்கின்றீர்களே" என்று...அதை கேட்டதும் 'சீடன் கற்பித்த பாடம் குருவிற்கு விளங்கி இருக்க வேண்டும் என்பதை சொல்லியும் புரிய வைக்க வேண்டுமோ?"...

நினைவுகள் என்பது நம்மை அறியாமலேயே சில நேரங்களில் ஆழ்சுழியாய் எங்கெங்கோ இழுத்துச்செல்லும். நாம் விரும்பும் ஒருவர் நம்மை காயப்படுத்தும் சொல் ஒன்று சொல்லிவிட்டால் மனம் அந்த நினைப்பை விட்டு வரவே மறுக்கும். மறக்க வேண்டியது நினைப்பில் நின்று அலைக்கழிக்கும். அதற்கு சரியான வழி மனதை ஒருமுகப்படுத்துவது பிடித்த நல்ல விசயங்களில் மனதை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். நிறைய நல்ல புத்தகங்கள் வாசிக்க வேண்டும்.

நல்ல புத்தகங்கள் போல் நல் நண்பன் என்று வேறெதுவும் இல்லை. அது உங்கள் நல் வாழ்கைக்கு வழிகாட்டி. நிறைய வாசியுங்கள், குறைவாகப் பேசுங்கள். எப்போதும் நிறைய நல்ல விசயங்கள் கேட்க வேண்டும் என்பதற்காகவே நமக்கு இருகாதுகளையும் பேச்சின் வீரியம்குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக இறைவனால் ஒரே ஒரு நாக்கும் தரப்பட்டுள்ளது.

'கேட்பது உங்களைச் செதுக்கி செம்மைப் படுத்த உதவும். அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லப்போகின்றேன் என்ற பேர்வழியில் நிறைய பேசாதீர்கள். அதுவே உங்கள் நல்ல பெயரை பல வேளைகளில் கெடுக்க வழி வகுத்துவிடும்.

'அரிச்சந்திரன் நாடம் பார்த்து ஒரே ஒரு காந்தி தான் மஹாத்மா ஆனார். அதைப்போல் உங்கள் பயனுள்ள விசயங்கள் யாரிக்கு வழிகாட்டுமோ அவர்களைப்போய்ச்சேரும். நிறைய வாசியுங்கள், எழுதுங்கள், எப்போது பேசுவீர்கள் என்று ஆவல் பொங்க காத்திருக்கும் போது உங்கள் வாய் திறந்து பேசுங்கள். மீண்டும் அடுத்த வாரம் உங்களை வளவினுள் சந்திக்கும் வரை.....

உங்களிடம் இருந்து........................

--
என்றென்றும் நட்புடன்
+நம்பிக்கையுடன்
உங்கள் சுதனின்விஜி

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4