Sunday, March 19, 2006

உன் காலத்துள் நான்

காலமாகிவிட்டார் எனும் போது
கை நழுவி விட்டார் என்று பொருள்
உள்ளங்கைத் தண்ணீராய் நழுவி
ஓடுகிறது காலம்
உன்னோடு ஒட்டச் சொல்லி
வந்து வந்து நிற்கிறாய் கனவில்
யயாதி போல் காலத்தை
மீடுத்தரவல்லவொரு பிள்ளை
பெற்றேன் இல்லை நான்
காலத்தின் ஓட்டத்தில் கைகோர்த்து
களைத்து பின் காலமாகிவிடுதல் போலும்
ஆனாலும்..
காலம் என் கைவசம்தான்
என்றேன். நீ புன்னகைத்தாய்
உன்னை நான் இப்போது
உணர்தல் போலும்
காலத்தையும் உணர்கின்றேன் காண்
என் புணர்ச்சியின்றி
காலம் இல்லை காரிகையே!
உன் கைக்குள்
நானில்லை ஆனால்
உன் காலத்துள் நான்.

எழுதியவர்: காழியூரார்

காலமே காலமே
காலமற்ற வெளியுண்டோ..
காலனுக்கு வாழ்க்கைப்பட்டுக்
காலமுண்ணும் மானுடா....

எழுதியவர்: அரங்கர்

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4