Tuesday, April 04, 2006

குழல் இனிது யாழ் இனிது - இரவா

7.3 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.


தம் மக்களை தம் செல்வம் என்று போற்றுவர் பெற்றோர். அப்பெற்றோரது செல்வமாகிய மக்கள் , அவரவர் செய்த செயலால் வரும். அத்தகைய மக்கள், வினையின் பயனால் ஈட்டும் செல்வம் அவரவர் பெற்றோரும் இன்புற்றிட வாய்ப்புக் கிட்டும்.

அமிழ்தினும் ஆற்றல் இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்

அமிழ்து சுவை மிகுந்ததே ஆயினும், அத்தனினும் மிகுந்த சுவையுடையது, தன் மக்களது சிறு கை அளாவி கூழான உணவு.

7.5 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.

பிள்ளைகள் உடலைப் பெற்றோர் தீண்டல் அது அவர்தம் உடலுக்கு இன்பம். பிள்ளைகளின் செற்களை கேட்டால் செவிக்கு இன்பம்.

நன்மக்களைப் பெற்றார்க்கு, உடல்வழியாகவும் செவிவழியாகவும் மனத்துக்கு இன்பத்தைத் தருவிப்பது, பிள்ளைப் பேற்றினால் பெறுகின்ற இன்பமாகும் .


7.6 குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

பரதம் ஆடுதற்குரிய குழலின் ஓசையும் பண்ணிசைக்குரிய யாழின் ஓசையும் இனிய இசை என்று கூறுவர், குழவிப் பருவத்து மழலை பேசுகின்ற தம்மக்களின் மழலைச் சொல்லைக் கேளாதவர்கள் .


பரதத்துக்குக் குழலும் பண்ணுக்கு யாழும் இனிதென்பர். ஆக,அவ்விரண்டும் இணைந்து இசைக்கும் இசை இன்பம் பயக்குமென்பதால், அவ்விரண்டு இசையைவிடவும் இனியது மழலைச் சொல் என்றார்.

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.


தந்தை, கல்வி கேள்வியால் திறன்மிக்க தன் மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மையாவது , கற்றோர்கள் அவையில் முதன்மை நிலையிலிருக்கும் அளவிற்குச் சிறந்த கல்விமானாக்குவதாகும்
.

'செல்வந்தனாவதை விடவும் சிறந்தது கல்விமானாவது' என்னும் கருத்து புலப்படுமாறு உரைக்கப்பட்டுள்ளது .

அன்புடன்
இரவா

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4