Monday, December 11, 2006

காலத்தை வென்றவன் சூப்பர் ஸ்டார்



முத்தமிழ் குழுமத்துக்காக எழுதியவர் சிவா

இனிய இணைய இதயங்களுக்கு வணக்கம் வாழிய நலம்,
இன்று சூப்பர்ஸ்டார் என்று அனைவராலும் புகழ்ந்துபாராட்டப்படும் ஒரு மனிதனுக்கு பிறந்தநாள், மண்ணில் உதித்தநாள், எவ்வளவோ பேதங்கள் வேறுபாடுகள் கூறப்படலாம், அவர் கன்னடர், மகாராட்டிரர் இதுபோல, ஆயினும் அடிப்படையில் அவர் ஒரு நல்ல மனிதர். அதுவே இன்றும் என்னை அவரின் ரசிகனாக வைத்து ஒரு பதிவு போடும் அளவிற்கு கொண்டுவந்திருக்கின்றது.

ஒரு 12 வருடங்களுக்கு முன் என் எண்ணக்குதிரையை ஓட்டுகின்றேன், 1993ஆம் வருடம், நான் மூன்றாம் ஆண்டு இயந்திரப்பொறியியல் ஆதிபராசக்தி பொறியியற்கல்லூரியில் படித்துவந்த சமயம், டிசம்பர் 12, தலைவரின் பிறந்தநாள் வந்தது, என் வகுப்புத்தோழர்கள் அனைவருக்கும், மற்றும் என் வகுப்பு ஆசிரியருக்கும், எங்கள் கல்லூரி கேண்டீனில் தேனீர் மற்றும் கேக் வாங்கிக்கொடுத்தது நினைவில் இன்றும் நிற்கின்றது, என் அப்போதைய கணினி ஆசிரியரான திரு.ஜவஹர் என்னிடம் கேட்டார், இந்த வயசுலயும் எப்படிப்பா சினிமாக்காரங்களுக்கு விசிரியா இருக்கீங்க? அப்படினு, நான் சொன்னேன் இன்னும் 50 வருசம் போய் கேட்டாலும் நான் விசிரியாத்தான் சார் இருப்பேன் அப்படின்னு... :) என் குரூப் தோழர்கள் இன்றும் ரஜினிப்படம் வந்தால் அமெரிக்காவில் இருந்தாலும் 500மைல்தூரத்தில் படம் போட்டிருந்தாலும், கார் போட்டுக்கிட்டு போயாச்சும் பாலாபிசேகம் எல்லாம் தலைவர் கட்டவுட்டுக்கு செய்துட்டு படம் பார்த்து விசில் அடிச்சிட்டு வந்துதான் மறுவேளை பார்க்கிறாங்கன்னா பார்த்துக்கோங்களேன் எப்படி எங்கள் தலைவர் பக்தி அப்படினு?

இதுக்கு இன்னும் ஒரு காரணமும் இருக்கு, என்னுடன் முதல் வருடம் ஜெயச்சந்திரன் என்று ஒரு தோழன் படித்தான், அவனுக்கு கல்லூரிக்கு பணம் கட்ட சிறிது பண முடை வந்ததால் அவன் தந்தையுடன் சென்று ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து முறையிட, ஒரு முழு செமஸ்டர் பீஸ் மற்றும் உணவுக்கட்டணத்தையும் உடனடியா கொடுத்தனுப்பின அந்த வள்ளலுக்கு ஒரு பதிவு என்ன? ஓராயிரம் பதிவு போட்டாலும் தகும்..
என்றும் ரஜினி ரசிகனாய்,
ஸ்ரீஷிவ்...:)

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4