Thursday, January 04, 2007

அகமே புறம் - பகுதி 4

அகமே புறம் - 4
மனத்தின் தன்மையும் வன்மையும் -3

சகல வளர்ச்சியும் வாழ்வும் அகத்திலிருந்து புறத்திற்கு வ்ருகின்றன; சகல தேய்வும் அழிவும் புறத்திலிருந்து அகத்திறகுச் செல்கின்றன. இது பிரபஞ்சத்தின் ஒரு விதி.

சகல விரிவுகளும் அகத்திலிருந்து நிகழ்கின்றன; சகல திருத்தங்களும் அகத்தில் செய்யப்படவேண்டும். எவன் பிறரோடு போராடுதலை விட்டுத் தனது மனத்தைத் திருத்துவதிலும், பலப்படுத்துவதிலும், வளர்ப்பதிலும், தனது சக்திகளைப் பிரயோகிக்கிறானோ அவன் தனது சக்திகளையெல்லாம் ஒருமுகப்படுத்தித் தன்னைப் பாதுகாத்துக்கொள்கிறான்; அவன் தனது மனத்தைச் சமநிலையில் நிற்கச்செய்த பொழுது இரக்கத்தாலும் ஈகையாலும் பிறரையும் அந்த நிலைமைக்குக் கொண்டு வருகிறான்; ஏனெனில், ஒருவன் பிறருடைய மனத்தை நடத்துவதும் ஆளுவதும் ஞானத்துக்கும் சாந்திக்கும் வழிகள் அல்ல; தனது சொந்த மனத்தின் மீது தனது நியாயமான அதிகாரத்தைச் செலுத்துவதும் உயர் தர ஒழுக்கங்களாகிய சன்மார்க்கங்களில் தன்னை நடத்துவதும் ஞானத்துக்கும்
சாந்திக்கும் வழிகள்.

ஒருவனுடைய வாழ்வு அவனது அகத்தினின்றும் அவனது மனத்தினின்றும் வருகிறது. அவன் அந்த மனத்தைத் தனது சொந்த நினைப்புக்களையும் செயல்களையும் கலந்து உண்டுபண்ணியிருக்கிறான். அவன் தனக்கு வேண்டும் நினைப்புகளைத் தெரிந்தெடுத்துத் தனது மனத்தைத் திருத்தும் சக்தியை உடையவன். ஆகையால், அவன் தனது வாழ்வையும் திருத்திக் கொள்ளக்கூடும். ஆன்றோரும்,
"ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர்"

என்று கூறியுள்ளார்.

மனம் விரியும்.....

நன்றி
ஜேம்ஸ் ஆலன்
சுவாமி வனஜானந்தா
வ.உ.சி.
பிரஹ்மஸ்ரீ கோபால்ஜி
Dr.M.S.உதயமூர்த்தி

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4